டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நோஸ்கோவா

முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்றார்.

'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய லிண்டா நோஸ்கோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

SCROLL FOR NEXT