டென்னிஸ்

Washington Open tennis: சாம்பியன் பட்டம் வென்றார் கனடா வீராங்கனை

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் இறுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 70 நிமிடங்கள் நடைபெற்றது.

நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, எலினா ரிபாகினா ஆகியோரை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.