ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் வென்ற கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டயானா ஷ்னைடர், சுலோவோகியாவின் மியா போஹன்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஷ்னைடர் 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ராகிமோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டயானா ஷ்னைடர், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதுகிறார்.