சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா, சக நாட்டு வீராங்கனையான நிகோலா பர்டுன்கோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பர்டுன்கோவா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முசோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.