டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முன்னணி வீரர்களை முடித்துவிட்ட ஜூனியர்கள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், அல்காரஸ், ஸ்வரேஏவ், மெத்வதேவ் ஆகியோரை ஜுனியர் வீரர்கள் வீழ்த்தினர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று விளையாடினர்.

தொடரும் ஜோகோவிச் சோகம்

நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அதே சுற்றில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்சிடம் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதேபோல் 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஆகியோரும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

மூன்றாவது சுற்றில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்சிடம் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மேலும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே மற்றும் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சின் ஆர்தல் பில்ஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெகா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

நான்காவது சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ரஷியாவின் மெத்வதேவிடம் 4-6, 5-7 என தோல்வி அடைந்தார். மேலும்,

ரஷியாவின் கரண் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், நார்வேயின் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

மெத்வதேவ், ஸ்வரேவ் தோல்வி

அரையிறுதியிலும் நம்பர் 1 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், சக நாட்டு வீரரான அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினோவை சந்திக்கிறார். இருவரும் முதல் முறையாக ஷாங்காய் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT