டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டிஷ் ஜோடி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷைச் சேர்ந்த ஜூலியன் கேஷ்- லாயிட் கிளாஸ்பூல் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ்-டேவிட் பெல் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டிஷ் ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சீனா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையரில் பட்டம் வெல்லும் முதல் பிரிட்டிஷ் ஜோடி இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT