டென்னிஸ்

French Open டென்னிஸ்: முதல் சுற்றில் ஜெசிகா பெகுலாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலிய வீராங்கனை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீராங்கனையும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரல் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 6-1 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை அடுத்த இரு செட்களை 6-3, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் டாப் 5 வீராங்கனையான ஜெசிகா பெகுலா முதல் சுற்றிலேயே பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.