பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா முன்னேறினார்.
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய 7-6 ( 7-2), 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 2 மணி 45 நிமிட நேரத்தில் முடிவுக்கு வந்தது.
ஜெசிகா பெகுலா தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பிடம் தோல்வி அடைந்தார். 2-வது போட்டியில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை வீழ்த்தினார்.
இரு வெற்றிகள் பெற்ற ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அவர் அரையிறுதியில் 3-வது வரிசையில் உள்ள ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை தோற்கடித்தார். ஆனாலும் அவர் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.
விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா அல்லது எலினா சுவிடோலினாவை சந்திக்கிறார்.
நாளை சபலென்கா-சுவிடோலினா இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்பவர் அரையிறுதிக்கு தகுதிபெறுவார்.