சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்ட்ரா ஈலா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா உடன் மோத உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர்-உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.