டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா எளிதில் வெற்றி பெற்றார்.

மாலை மலர்

ரியாத்:

54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.