நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உள்பட பலரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.