டென்னிஸ்

ஆபரேஷன் எதிரொலி: ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார் ஜானிக் சின்னர்

இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சின்னர் தோற்றிருந்தார்.

முழங்காலில் செய்துள்ள ஆபரேஷனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜானிக் சின்னர் விலகியுள்ளார்.

இத்தாலி டென்னிஸ் வீரரும், உலகின் 2-ம் நிலை வீரருமான ஜானிக் சின்னர், முழங்கால் காயத்துக்காக ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சின்னர் எக்ஸ் தளத்தில், முழங்காலில் சிறிய ஆபரேஷன் செய்துகொண்டேன். எனது குழுவுடன் இணைந்து மீட்புப் பணியை தொடங்க உள்ளேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் இருந்து 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் 'நம்பர் ஒன்' வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர் விலகியுள்ளார்.

வலது முழங்காலில் செய்துள்ள ஆபரேஷனில் இருந்து மீண்டுவர 3 மாதம் பிடிக்கும் என்பதால், அவர் ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர் பங்கேற்க மாட்டார் என்பதை ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த ஜூலையில் நடந்த விம்பிள்டன் தொடரில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். அதன்பின், காயத்தால் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை இழந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சின்னர் தோற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT