டென்னிஸ்

Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் 1 வீரர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த நியூனோ போர்ஜஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 7-6 (7-4), 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.