டென்னிஸ்

ஜோகோவிச் சாதனையை சமன் செய்த ஜானிக் சின்னர்

50 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி வீரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடந்தது. இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி வீரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், 1,000 தரவரிசை புள்ளிகள் வழங்கும் 9 மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னர் பெற்றார்.

ஏற்கனவே செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.