டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் காலிறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்காவின் இவா ஜோவிக், ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரஷிய வீராங்கனை 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

SCROLL FOR NEXT