டென்னிஸ்

French Open டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ஆண்டிரியா வவசோரி-சாரா எர்ரானி ஜோடி, அமெரிக்காவின் இவான் கிங்-கனடாவின் கேப்ரில்லா டேப்ரோஸ்கி ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த இத்தாலி ஜோடி, அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 10-4 என வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கடந்த ஆண்டும் இதே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.