டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.

மாலை மலர்

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.