சிமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி 
டென்னிஸ்

Miami Open Tennis | ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி ஜோடி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

இதில் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இத்தாலியின் சிமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.