இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மெட்வதேவை வீழ்த்தி சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
கலிபோர்னியா:
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் 2-வது வரிசையில் உள்ள ஜானிக் சின்னர் (இத்தாலி)-11-வது வரிசையில் உள்ள மெட்வதேவ் (ரஷியா) மோதினார்கள்.
இதில் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் 7-6 (8-6), 7-6 ( 7-4) என்ற நேர் செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தினார்.
சின்னர் தொடர்ச்சியாக கைப்பற்றிய 6-வது மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோருடன் இணைந்து உலகின் 3-வது வீரர் என்ற மைல்கல்லை தொட்டார்.