டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்விடோலினா

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 4 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், நம்பர் 7 வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 6-2 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்விடோலினா 6-2 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொள்கிறார்.