சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பெல்ஜிய வீராங்கனை 7-6 (7-0), 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.