சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 7-5, 6-2 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடனும், இகா ஸ்வியாடெக் பிரான்சின் டயானே பாரி உடனும் மோதுகின்றனர்.