டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஆன் லீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் பிரிட்டனின் சோனே கர்தால், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ, போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT