களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 4 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.