டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: சபலென்கா, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை சாம்சனோவாவை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக். சபலென்காவை எதிர்கொள்கிறார்.