பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தர நிலை பெறாத டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் ஜெர்மனி வீரரான ஸ்வெரேவ் 7(7)-6(3), 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் நாளை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோடரை எதிர்கொள்கிறார்.
இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 28-ம் நிலை வீரரான பிரேசில் நாட்டின் ஜோவோ பிரான்கா குய்மரேஸ் ஃபோன்செகா மோதின. இதில் ஃபோன்செகா 7-5, 7(10)-6(3), 5-7, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.