கோஸ்ட்யூக்- சிர்ஸ்டியா கோஸ்ட்யூக்- சிர்ஸ்டியா
டென்னிஸ்

French Open காலிறுதியில் சிர்ஸ்டியா, கோஸ்ட்யூக்

4-வது சுற்றில் சிர்ஷ்டியா, கோஸ்ட்யூக் நேர்செட் கணக்கில் எதிரிகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, விம்பிள்டன், அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் புல் தரையில் நடத்தப்படும். பிரெஞ்ச் ஓபன் (கிராண்ட்ஸ்லாம்) மட்டும்தான செம்மண் தரையில் நடத்தப்படும். இதனால் முன்னணி வீரர்கள் வீராங்கனைகள் இதில் தோற்பதுண்டு.

இன்று பெண்களுக்கான 4-வது சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு போட்டிகளில் ருமேனியாவின் சிர்ஷ்டியா, சீனாவில் வாங்-ஐ எதிர்கொண்டார். இதில் கிறிஸ்டி முதல் செட்டை 6-3 எனவும், 2-வது செட்டை 7(7)-6(4) எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், கனடா வீராங்கனை கோலுபிக்கை எதிர்கொண்டார். இதில் கோஸ்ட்யூக் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.