பிரெஞ்ச் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 26-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜேகப் மென்சிக்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஸ்வெரேவ் 7-5 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 3-6 என இழந்தார். இருந்தபோதிலும் 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.