அண்ட்ரீவா
டென்னிஸ்

French Open | ரஷிய வீராங்கனை அண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷிய வீராங்கனை 2-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 8-ம் நிலை வீராங்கனயைான ரஷியாவின் மிர்ரா அண்ட்ரீவா, தரநிலை பெறாத போலந்தின் மாயா ச்வாலின்ஸ்கா பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் அண்ட்ரீவா 6-3, 6-2 என எளிதாக வெற்றி பெற்று, பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார். நாளை ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஸ்வெரேவ்- கொபோலி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.