டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் எலினா ரிபாகினா

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, போலந்தின் கேடரினா கவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டில் 6-1 என வென்றார். இதற்கு பதிலடியாக கேடரினா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 6-1 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் ரிபாகினா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT