டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் எலினா ரிபாகினா

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுப் போட்டி இன்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா,

ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டி முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரிபாகினா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT