டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: முதல் சுற்றில் குரோசிய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இதில் குரோசியா வீராங்கனை டோனா வெகிக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் குரோசிய வீராங்கனை டோனா வெகிக், அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஆஷ்லின் 5-7, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குரோசிய வீராங்கனை வெகிக் தொடரில் இருந்து வெளியேறினார்.