டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்றது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். 2வது செட்டில் டி மினார் 1-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கைப்பற்றி அசத்தினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT