கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 3 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் வாலன்டின் ராயர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 6-7 (7-9), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-1, 1-6, 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் கேமிலோ யூகோ கேராபெலை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.