சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் யுன்சாவ்கேட்டை காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.