கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 3 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரேசிலின் ஜோ பொன்சேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் இரு செட்களை 6-4, 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பொன்சேகா அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 6-3, 7-5, 7-5 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ஜோகோவிச் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.