ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நேரடியாக தகுதிபெற்றார்.
இன்று நடந்த 2-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய போலந்து வீரர் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ஜோகோவிச் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.