டென்னிஸ்

Wimbledon Tennis: நீண்ட போராட்டத்துக்கு பின் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-6 (12-10) என போராடி வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது செட்டை பெலிக்ஸ் ஆகர் 6-3 என கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டை 6-3 என ஜோகோவிச் மீண்டும் வென்றார். பதிலடியாக 4வது செட்டை பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-4) என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ஜோகோவிச் 7-6 (10-4) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதி நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னருடன், ஜோகோவிச் மோத உள்ளார்.

இன்று நடைபெறும் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடனும், இங்கிலாந்தின் ஆர்தர் பெரி, இத்தாலியின் பிளாவியோ கோபாலி உடனும் மோதுகின்றனர்.