டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் சாம்பியன்: தரவரிசையில் 13 இடம் முன்னேறிய ஸ்பெயின் வீரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் டேவிடோவிச் போகினோ சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், சக நாட்டு வீரரான அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டேவிடோவிச் 1-6, 7-6 (7-5), 6-4 என எளிதில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், ஏடிபி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினோ 13 இடங்கள் முன்னேறி 13-வது இடம் பிடித்துள்ளார்.

ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்திலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்றொரு ஸ்பெயின் வீரர் ரபேல் ஜோடார் 11-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

SCROLL FOR NEXT