டென்னிஸ்

Berlin Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறியது பெகுலா, கோகோ காப் ஜோடி

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா ஜோடி, ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவா-ரஷியாவின் டயானா ஷ்னைடர் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப், பெகுலா ஜோடி 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.