டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினர் கோகோ காப், நவோமி ஒசாகா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது 3வது சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த 3வது சுற்று போட்டியில் நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான கோகோ காப், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள நான்காவது சுற்றில் கோகோ காப், ரஷியாவின் அலினா கோர்னீவா உடனும், நவோமி ஒசாகா கனடாவின் லேலெ பெர்னாண்டஸ் உடனும் மோதுகின்றனர்.

SCROLL FOR NEXT