டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் லிண்டா நோஸ்காவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய லிண்டா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக கோகோ காப் 2வது செட்டை 6-1 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லிண்டா 7-6 (7-5) என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.