டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய எலைஸ் மெர்டன்ஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT