பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்றனர்.
'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் முதல் செட்டை 6-4 என வென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய ஜெசிகா பெகுலா 2வது செட்டை 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நடப்பு ஆண்டில் நம்பர் 1 வீராங்கனையான எலினா ரிபாகினா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.