மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் சுவிஸ் வீராங்கனையான பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இந்த முதல் செட்டில் கோகோ காஃப்-ம் 2-வது செட்டை பென்சிக்கும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது சுற்று பரபரப்பாக சென்றது. இதில் 6-3 என்ற கணக்கில் கோகோ வெற்றி பெற்றார். இதன்மூலம் 6-3, 1-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த கரோலினா முச்சோவா கனடா வீராங்கனையான விக்டோரியா வனேசாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முச்சோவா 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முச்சோவா முன்னேறினார்.