டென்னிஸ்

Italy Open டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோகோ காப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.