ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீராங்கனை கிளெய்ர் லியூ முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கிளெய்ர் லியூ, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா ஷுப்லேஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிளெய்ர் லியூ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.