லினெட்
டென்னிஸ்

சென்னை WTA 250 டென்னிஸ்: மாக்டா லினெட் சாம்பியன்

லினெட் 2-1 என ஜானிஸ் ஜென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னையில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் WTA 250 சென்னை ஓபன் போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறுதிப் போட்டி தொடங்க இருந்தது. இதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த தரநிலையில் முதல் இடம் பெற்ற ஜானிஸ் ஜென்- போலந்து நாட்டைச் சேர்ந்த தரநிைையில் 3-ம் இடம் பிடித்த மாக்டா லினெட் மோத இருந்தனர்.

தீபாவளி காற்று மாசுவால் போட்டி ஒத்திவைப்பு

நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டு விளையாடாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்று காலை 11 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற்றது.

முதல் செட்டை ஜென் 7-5 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதாக லினெட் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியை பெற லினெட்டுகு்கு 2.43 நிமிடங்கள் தேவைப்பட்டது.

SCROLL FOR NEXT