சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், போர்ச்சுகலின் ஜெய்மி பரியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய போர்ச்சுகல் வீரர் முதல் செட்டை 7-6 (7-1) என வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட கேஸ்பர் ரூட் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ உடன் மோதுகிறார்.