டென்னிஸ்

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய காஸ்பர் ரூட், டாமி பால்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு அமெரிக்காவின் டாமி பால், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் முன்னேறினர்.

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஜெர்மனியின் ஜேன் லென்னார்ட் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய காஸ்பர் ரூட் 6-3, 6-3 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் குயிண்டென் ஹாலிசை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT